இலங்கையில் உள்ள ஆண்கள் தாய்லாந்துக்குப் பறப்பதற்கு இதுதான் காரணமாம்!!

இலங்கையில் இருந்து வருடாந்தம் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர், தாய்லாந்து நாட்டுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

தாய்லாந்தில் வசித்து வரும் சவாரி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் நாலக கருணாகலகே பல வருடங்களாக மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் தாய்லாந்தில் இருந்து ஒரு வருடத்திற்கு இலங்கைக்கு 10 ஆயிரத்தும் குறைவானவர்களே வந்து செல்கின்றனர்.

இலங்கையர்கள் தாய்லாந்து செல்ல பெற்றுக்கொள்ளும் வீசா அனுமதிக்கான கட்டணங்கள் மூலம், தாய்லாந்துக்கு வருடாந்தம் 700 மில்லியன் ரூபா வருமானம் கிடைப்பதாக நாலகவின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் தாய்லாந்து பிரஜைகள் இலங்கை வருவதற்காக பெற்றுக்கொள்ளும் வீசா கட்டணங்கள் மூலம், இலங்கை வருடத்திற்கு 40 மில்லியன் ரூபாவை மாத்திரமே வருமானமாக பெறுகின்றது எனவும் தெரியவந்துள்ளது.

தாய்லாந்துக்கு நாட்டுக்கான விமான கட்டணங்கள் குறைவானவை என்பதுடன், இலங்கையின் பெருமளவு நிதி மற்றும் வங்கிகள், பயிற்சிக்காக அதிகமாக தமது பணியாளர்களை அழைத்து செல்வதுடன், அதிகமான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தவும் தாய்லாந்துக்கான சுற்றுலாக்களை மேற்கொள்கின்றனர்.

அத்துடன் பாலியல் ரீதியான சமாச்சாரங்கள் அனைத்தும் மலிவானவை என்பது குறிப்பிடத்தக்கது.