யாழில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட கள்ளன் தப்பி ஓடியது எப்படி?

யாழில் பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த சந்தேகநபர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.

அண்மையில் யாழ். ஆணைக்கோட்டை – ஆறுகால்மடம் பகுதியிலுள்ள வீடொன்றில் மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கிளிநொச்சியில் வைத்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ். பொலிஸாரினால் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இதனையடுத்து, பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர்களை நேற்று சனிக்கிழமை, நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்துவதற்காக பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் அழைத்து வந்தனர்.

இதன்போது அதில் ஒருவர் தப்பி ஓடியுள்ளார்.

மற்ற இளைஞரை நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்தியதுடன், தப்பி ஓடி கைதி பற்றி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.