மிஸ்பா உல் ஹக் இவ்வருட இறுதியில் ஓய்வு பெறத் தீர்மானம்

பாகிஸ்தான் டெஸ்ட் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் இவ்வருட இறுதியில் ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.

இவ்வருட இறுதியில் அவுஸ்திரேலியாவுடன் இடம் பெறவுள்ள டெஸ்ட் போட்டியினை தொடர்ந்து இவர் சர்வதேச போட்டிகளில் இருந்தே  ஓய்வு பெறவுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் வயதுமிக்க வீரரான இவருக்கு எதிர்வரும் மாதத்துடன் 42 வயது பூர்த்தியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் , மிஸ்பா உல் ஹக் தொடர்ந்து அணியின் தலைமை பதவியில் இருந்து அணியை வலுப்படுத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கேட்டுக்கொண்டுள்ளது.