கடந்த சில தினங்களாக நகர திட்டமிடல் மற்றும் நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளேயின் கையடக்கத் தொலைபேசிக்கு உள்வரும் அநாமேதய அழைப்புகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அமைச்சரின் முறைப்பாட்டிற்கு அமைய இது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்டப் பொலிஸார் கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றில் திங்கட்கிழமை (18) தெரிவித்துள்ளனர்.
கடந்த 7ஆம் திகதி முதல் இவ்வாறு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு தொந்தரவு செய்வதாக அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்தில் இன்று விளக்கம் அளித்துள்ளனர்.
இதனைக் கவனத்திற்கொண்ட நீதிமன்றம் உள்வந்த அழைப்புக்கள் தொடர்பில் தகவல் அடங்கிய அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தொலைபேசி சேவை வழங்குநருக்கு உத்தரவிட்டுள்ளது.