இலத்திரனியல் ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கு சுயாதீன அதிகார சபையொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் செயற்படுத்தப்படும் முறைமையை போன்றே, இவற்றை செய்வதற்கு அரசாங்கம் ஆலோசித்துள்ளது. இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே குறித்த இந்த தீர்மானத்தை அரசாங்கம் எட்டியுள்ளதாக அறியமுடிகின்றது.