கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதத்தில் ஆரம்பம்

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படும் என உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெறும் எனவும், கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பதற்கு பெற்றுக்கொள்ளப்படும் காணிகளுக்கு சந்தை மதிப்புக்கு அமைய இழப்பீடு வழங்கப்படும் எனவும் அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.