மாணவியின் உயிரை பறித்த ‘கேக்

புத்தாண்டு பண்டிகையின் போது அனுராதபுரம் பிரதேசத்தின் வீடொன்றில் இடம் பெற்ற விருந்துபசாரத்தின் இறுதியில் கேக் சாப்பிட்ட பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் உயிரிழந்தது அனுராதபுரம் மத்திய கல்லூரியில் 11ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவராவார் கேக் சாப்பிட்ட பின்னர் சுயநினைவிழந்த குறித்த மாணவி அனுராதபுரம் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். ஒவ்வாமை காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது