இருபதுக்கு 20 போட்டி முறையானது உடனடியாய் தயாரிக்கும் Maggie Noodles போன்றதென இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் தலைவர் அர்ஜுன ரணதுங்க இந்திய செய்தி ஊடகமான News 18 எனும் சேவைக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.
மேலும் அர்ஜுன கூறுகையில்;
“நான் இருபதுக்கு 20 ஓவர் பந்துவீச்சு ரசிகனல்ல. அது வெறும் உடனடித் தயாரிப்பான Maggie Noodles போன்றது.விரைவில் வயிறு நிறையக்கூடியது, ஆனால் உடல் நலத்திற்கு நல்லதல்ல. அதாவது நான் ஏன் இவ்வாறு கூறுவதென்றால் இருபதுக்கு 20 போட்டியின் போது வேகமாக வரும் பந்தினை பதம்பார்க்க சிறந்த (power hitters) வீரர்கள் தேவை. தெற்காசிய கிரிக்கெட் வீரர்கள் power hitters அல்லர். அவர்கள் துடுப்பாட்ட நுட்பத்திலேயே சிறந்தவர்கள். இந்தியாவிற்கும் இன்னும் 10 வருடங்களில் நன்றாக புரியும்”
“நான் எப்போதும் இளம் வீரர்களுக்கு கூறுவது, அவரவர் திறமைக்கு ஏற்ப விளையாடுங்கள். தனது திறமை குறித்து போதிய அறிவில்லாமல் களத்தில் இறங்கவேண்டாம்… திறமை இருக்க வேண்டும் என்பதோடு அர்ப்பணிப்பும் கட்டாயம் தேவைப்படுகின்றது. கிரிக்கெட்டில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் தான்…
“1996ம் ஆண்டு உலகக்கிண்ணத்தினை வெல்ல சுலபமாக முடியவில்லை. நான் தேர்ந்தெடுத்தது அர்ப்பணிப்புடன் செயல்படக்கூடிய வீரர்களை மட்டுமே. எமக்கு பணம் குறித்த ஆர்வம் இருக்கவில்லை… எனக்கு நாட்டிற்காக உயிரைக்கூட இழகத்தயாராகும் 14 நல்ல கிரிக்கெட் வீரர்களே தேவைப்பட்டது.. அரவிந்தவை தவிர எமக்கு வேறு நட்சத்திரம் இருக்கவில்லை…”
என அர்ஜுன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“தலைவர் என்பவர் செஸ் வீரர் போன்று இருக்க வேண்டும். எந்நேரமும் யோசனை செய்து முடிவெடுக்க வேண்டும். குழந்தைகள் போன்று சாக்குப்போக்கு கூற இயலாது.. எதுஎவ்வாறாயினும் தைரியத்துடன் முகங்கொடுக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.