கழிவறை கட்டாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

இந்திய உத்தர பிரதேச மாநிலத்தில் மணமகன் வீட்டில் கழிவறை கட்டப்படாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணுக்கு மற்றொருவருடன் திருமணம் நடந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் கான்பூரை சேர்ந்தவர் நேகா (25). நேகாவிற்கு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் திருமணம் நிச்சயமானது.

இருவீட்டாரும் சேர்ந்து இம்முடிவை எடுத்துள்ளனர். இதனையடுத்து, இருவீட்டாரும் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாட்டை செய்யத் ஆரம்பித்துள்ளனர்.

அப் போது மணப் பெண் சார்பில் மண மகன் வீட்டா ருக்கு கோரிக் கை ஒன்று வைக்கப் பட்டது. மண மகன் வீட் கழிவறை கட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. மணமகன் வீட்டாரும் இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர்.

திருமணம் நெருங்கிய நிலையிலும் மணமகன் வீட்டில் கழிவறை கட்டுவதற்கான எவ்வித நடவடிக் கையும் எடுக்கப் படவில்லை. இது குறித்து மணமகளின் பெற்றோர் பல முறை கேட் டுள்ளனர்.

கழிவறை கட்டு வதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன என்று கூறியுள்ளனர். ஆனால், திருமண நாளன்று கழிவறை குறித்து கேட்டபோது இன்னும் கட்ட வில்லை என மாப்பிள்ளை வீட்டார் தரப்பிலிருந்து பதில் வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நேகா தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை உடனடியாக நிறுத்தியுள்ளார்.

அனைத்து வீடுகளிலும் கட்டாயம் கழிவறை கட்ட வேண்டும் என்ற சுகாதாரத் திட்டம் இந்திய மத்திய, மாநில அரசுகளால் செயற்படுத் தப்பட்டு வரும் நிலையில், நேகா எடுத்த முடிவினை பலதரப்பினர் வரவேற்றுள்ளனர்.

மேலும், நேகாவின் முடிவை பாராட்டிய உத்தர பிரதேசத்திலுள்ள தொண்டு நிறுவனம் ஒன்று அவருக்கு திருமணம் செய்து வைக்கும் பணியை ஏற்றுக் கொண்டது. அதன்படி வீட்டில் கழிவறையுள்ள மற்றொரு மணமகனை பார்த்து அவருக்கு மிக பிரமாண்டமாக திரும ணத்தை செய்து வைத்துள்ளது.

இது தொடர்பாக நேகா பேசுகையில், “மாப்பிள்ளை வீட்டில் கழிவறை கட்டுவதாக வாக்குறுதி கொடுத்தனர், ஆனால் கல்யான நாள் வரை கட்டளைவில்லை. எனவே திருமணத்தை நிறுத்தினேன்.

பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்திற்கு உத்வேகமளிக்கும் விதமாக நாமும் நம்முடைய பணியை செய்ய வேண்டும். வீட்டில் கழிவறை கட்டவேண்டும் என்பது அடிப்படை வசதியாகும்.” என்று கூறியுள்ளார்.