பள்ளியினுள் புகுந்து சாட்டை செய்த சிறுத்தை

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் மலையடிவாரத்தில் இருக்கும்  அரசு தொடக்கப் பள்ளியில் 14 மாணவர்களே படித்து வருகிறார்கள்.

நேற்று பகல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது பள்ளி மைதானத்தில் பசுக்களின் அலறல் சத்தம் கேட்டது.

உடனே மாணவர்கள் அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு சிறுத்தைப்புலி ஒன்று பசுக்களை துரத்திக் கொண்டிருப்பதை கண்டனர். அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் அவர்கள் இதுபற்றி பள்ளி ஆசிரியர்களிடமும் கூறினர்.

அவர்கள் உடனடியாக மாணவர்கள் அனைவரையும் அங்கிருந்து பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டது.

பின்னர் பள்ளிக்குள் சிறுத்தைப்புலி புகுந்தது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து புலியை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர்.

அந்த புலி மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களை விரட்டியபடி பள்ளிக்குள் புகுந்திருக்கலாம் என்று கருதிய வனத்துறையினர் அதனை கூண்டு அமைத்து பிடிக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.