தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் நடாத்தப்படும் ‘Meet the Minister’ நிகழ்ச்சியில் இம்முறை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பங்கேற்கவுள்ளார்.
இக்குறித்த சந்திப்பினால், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரினை வணிக வாய்ப்பு சார்ந்த சமூகத்திற்கு சந்திப்பதற்காக 2016 April 25ம் திகதி திங்கட்கிழமை கொழும்பு 10, இல.450, D.R.விஜேவர்தன மாவத்தையில் அமையப்பெற்றுள்ள தேசிய வர்த்தக சம்மேளனத்தின் கேட்போர்கூடத்தில் பி.ப 03.00 தொடக்கம் பி.ப 04.30 மணி வரை குறித்த சந்திப்பு நிகழ்ச்சி இடம்பெறும்.
இக்குறித்த சந்திப்பிற்கு பதிந்துகொள்ள 011-4741788 எனும் தொலைபேசி இலக்கத்துடன் மற்றும் sg@nationalchamber.lk , sect@nationalchamber.lk எனும் மினஞ்சல் முகவரிகளுடன் வர்த்தக சம்மேளனத்தினை தொடர்புகொள்ள முடியும்.