இங்கிலாந்துக்கான கிரிக்கெட் விஜயத்தின்போது சர்ச் சைக்குரிய கிரிக்கட் வீரர் சல்மான் பட்டை குழாமில் இணைப்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை எண்ணியுள்ளது. ஆனால் அவருக்கு பிரித்தானிய ஐக்கிய இராச்சியம் விசா அனுமதி வழங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
ஆறு வருடங்களுக்கு முன்னர் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இங்கிலாந்துடான டெஸ்ட் கிரிக் கெட் போட்டியின்போது இடம்பெற்ற உடன் நிர்ணய (நோ போல்) சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட அப்போதைய அணித் தலைவர் சல்மான் பட்டுக்கு 30 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன் ஐந்து வருட கிரிக்கெட் தடையும் விதிக்கப்பட்டிருந்தது.
ஏழு மாத சிறைத் தண்டனையை அனுபவித்த நிலையில் ஐக்கிய இராச்சிய அரசினால் சல்மான் பட் விடுவிக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.
முன்கூட்டியே நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டதன் காரணமாக அவருக்கு விதிக்கப்பட்ட 30 மாத சிறைத் தண்டனைக் காலம் பூர்த்தியாகும் நாள் முதல் பத்து வருடங் களுக்கு அவர் ஐக்கிய இராச்சியத்திற்கு செல்ல முடியாது.
12 மாதங்கள் முதல் 4 வருடங்களுக்கு உட்பட சிறைத் தண்டனை அனுபவிக்கும் ஒருவருக்கு சிறைத்தண்டனை நிறைவுபெற்ற நாள் முதல் பத்து வருடங்களுக்குள் நாட் டிற்குள் மீண்டும் வருவதற்கு குடிவரவு அதிகாரி அனுமதி வழங்க முடியாது என ஐக்கிய இராச்சிய உள்துறை அமைச்சு இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலியல் வன்முறை யில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில் 2012 இல் மைக்டைசனுக்கு விசா அனுமதி மறுக்கப் பட்டிருந்தமை குறிப் பிடத்தக்கது.
சல்மான்பட்டிற்கு விதிக்கப்பட்ட ஐந்து வருடத் தடை இவ் வருட முற்பகுதியில் நிறைவுபெற்றதை அடுத்து அவர் உள் ளூர் கிரிக்கட் போட்டி களில் விளையாடி வருகின்றார்.
இவருடன் உடன் நிர் ணய குற்றச்சாட்டில் தடைக்குட்பட்டிருந்த மொஹமத் ஆமிர் இவ் வருட முற்பகுதியல் நியூஸிலாந் துக்கு எதிரான தொடர் மூலம் சர்வதேச அரங்கில் மீண்டும் பிரவேசித்தார்.
இதே குற்றத்தின்பேரில் சிறைத் தண்டனை அனுபவித்த மூன்றாமவரான மொஹமத் ஆசிவ், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றபோதிலும் சர்வதேச போட்டிகளுக்கு மீண்டும் அழைக்கப்படவில்லை.