திருமணத்துக்கு திகதி குறிக்கப்பட்ட யுவதி விபத்தில் சிக்கி உயிரிழந்தார்: வீச்சுக் கல்முனையில் சம்பவம்

மட்­டக்­க­ளப்பு பொலிஸ் பிரிவு புதூர் வீச்­சுக்­கல்­முனை வீதியில் இடம்­பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக மட்­டக்­க­ளப்புப் பொலிஸார் தெரி­வித்­தனர்.

 

வீச்­சுக்­ கல்­முனை பிர­தான வீதியைச் சேர்ந்த விம­ல­நாதன் விநோ­தினி (24) என்­ப­வரே விபத்தில் சிக்கி படு­கா­ய­ம­டைந்த நிலையில் சிகிச்சை பய­னின்றி உயி­ரி­ழந்­த­வ­ராகும்.

சம்­பவம் பற்றி மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, கடந்த ஞாயிற்­றுக்­கிழமை மாலை இந்த யுவதி வீட்­டி­லி­ருந்து கடைக்கு பொருட்­களை வாங்­கு­வ­தற்­காகச் சென்று கொண்­டி­ருக்­கும்­போது உன்­னிச்சைக் குளத்­திற்கு நீராடச் சென்று திரும்பிக் கொண்­டி­ருந்­த­வர்கள் பய­ணித்த வேன் யுவதி மீது மோதி­யுள்­ளது.

இதில் படு­கா­ய­ம­டைந்த யுவதி மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார். உட்­கா­யங்கள் கார­ண­மாக பின்னர் அவர் அங்­கி­ருந்து அம்­பாறை பொது வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டார்.

எனினும், அங்கு சிகிச்­சை­ய­ளிக்­கப்­ப­ட்டு வந்த நிலையில் செவ்வாய் அதி­காலை உயி­ரி­ழந்­துள்ளார். விபத்தில் சிக்கி மரணித்த யுவதிக்கு மே 17 ஆம் திகதி திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது.