சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இராஜினாமா..?

பதில் பொலிஸ் மா அதிபர் பதவியில் செயற்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்க, பதில் பொலிஸ் மா பதவிலிருந்து இராஜினாமா செய்துகொள்ளவுள்ளதாக பொலிஸ் திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் ஓய்வினை அடுத்து, அந்தப் பதவி விக்கிரமசிங்கவிற்கு  கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவர் இருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு தொடர்பில் பிரதானியாக செயற்பட்ட விக்ரமசிங்க, பொலிஸ்மா அதிபர் பதவி கிடைக்கும் என மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்த ஒருவராகும்.

எனினும் புதிய பொலிஸ்மா அதிபராக பூஜித ஜயசுந்தரவின் பெயர் அரசியலமைப்பு சபையினால் ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்யப்பட்டது.

இதனால் விரக்கியடைந்த பிரதி பொலிஸ் மா அதிபர் விக்ரமசிங்க தனது இராஜினாமா கடிதத்தை பொலிஸ் திணைக்களத்திடமும், அதன் பிரதியை பாதுகாப்பு செயலாளர், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் அனுப்பி வைத்துள்ளதாக மேலும் தெரிய வருகிறது.