எதிர்வரும் மே 2ஆம் திகதி தொடக்கம் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
வட் வரி அதிகரிப்பின் காரணமாகவே குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஏற்பாட்டாளார் அசேல சம்பத் மேலும் தெரிவித்துள்ளார்.
சிற்றுண்டிகளின் வட் வரி அதிகரிப்பு தொடர்பில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மொத்த மற்றும் சில்லறை பொருட்களுக்கான வட் வரி அதிகரிப்பிற்கு அமைய சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்னும், குறிப்பாக 5, 10 மற்றும் 15 ரூபாவால் சிற்றுண்டிகளின் விலை அதிகரிக்கப்படும் எனவும் அவர் மேட்கோற்காட்டி குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் 2ஆம் திகதி முதல் இந்த விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஏற்பாட்டாளார் அசேல சம்பத் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.