IPL போட்டியிலிருந்து சாமுவேல் விலகல்

இந்த முறை இடம்பெற்று வரும் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் இருந்து, மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் சாமுவேல்ஸ் பத்ரி விலகியுள்ளார்.

ரோயல் செலஞ்சஜர் பெங்களுர்  அணிக்காக ஆடும் அவர், காயம் காரணமாக விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுழற்பந்து வீச்சாளரான பத்ரி இந்த முறை இடம்பெற்ற உலக கிண்ண இருபதுக்கு இருபது போட்டிகளின் இறுதி போட்டியின் போது காயமடைந்தார்.

அதிலிருந்து அவர் இதுவரையில் அவர் எந்த போட்டிகளிலும் பங்குகொள்ளவில்லை.

இந்த நிலையில், அவருக்கு பதிலாக ரோயல் செலஞ்சஜர் பெங்களுர் அணிக்கு தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பந்துவீச்சாளர் தப்ரைஸ் ஷம்ஸி  இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.