புத்தளம் மஹவெவ புஹூல்ஹேன பிரதேசத்தில் பல கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்றை நவகத்தேகம வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் பிடித்து தப்போவ வனத்தில் விடுவித்துள்ளனர்.
இந்தக் குரங்கு அப்பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவர்கள் பலரைக் கடித்துள்ளதோடு வீதியில் செல்லும் பெண்களின் பின்னால் சென்று அவர்களையும் கடித்துள்ளதாகவும் இதனால் பெண்கள் வீட்டின் வெளியே செல்ல அச்சமடைந்து இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் புத்தளம் மாவட்ட வன விலங்கு உதவிப் பணிப்பாளரின் ஆலோசனையின் பிரகாரம் ஆனவிழுந்தாவ வன அதிகாரி மற்றும் நவகத்தேகம வனப் பாதுகாவலர் ஆகியோர் வனவிலங்கு உதவியாளர்கள் குறித்த பிரதேசத்திற்குச் சென்று குரங்கைப் பிடித்து அதனைத் தப்போவ வனத்தில் விடுவித்தனர்.