சில அரசியல்வாதிகள் கூறுவதைப் போன்று, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தொடர்பில், பொலிஸில் எவ்வித முறைப்பாடுகளும் செய்யப்படவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது.
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த மாதம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்தபோது, இராணுவ அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தி இராணுவ முகாமொன்றுக்குள் செல்ல முற்பட்டதாக பிவித்துரு ஹெல உறுமய குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்கட்சித் தலைவருக்கு எதிராக விசாரணை
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கிளிநொச்சி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி – பரவிபாஞ்சானில் உள்ள இராணுவ முகாமிற்குள் அத்துமீறி பிரவேசித்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 16ம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டம் ஒன்றை அடுத்து, அவர்கள் குறித்த முகாமிற்குள் பிரவேசித்ததாக கூறப்படுகிறது.
இது சம்மந்தமாக முகாமின் அதிகாரிகளால் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி காவற்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.