சமீபத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்று தென் இந்திய நடிகைகளில் யாருக்கு முதல் இடம் என்ற கருத்துக்கணிப்பை ரசிகர்களிடம் நடத்தியது.
இதில் நயன்தாரா முதல் இடத்தை பிடித்துள்ளார்.
திரை உலகில் கதாநாயகியாக அடியெடுத்து வைப்பவர்கள் எல்லோரும் ஜெயிப்பதில்லை.
ஹீரோயின் ஆனவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வருவதில்லை. வந்தாலும் ஒரு சில ஆண்டுகளில் ரசிகர்கள் அவர்களை மறந்து விடுவார்கள்.
இந்த வரம்புகள் அனைத்தையும் உடைத்து எறிந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் கொடி கட்டி பறப்பவர் நயன்தாரா.
‘ஐயா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தமிழ் பட உலகின் முன்னணி நாயகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
தெலுங்கு, மலையாளத்திலும் முன்னணி நடிகை ஆனார். நயன்தாரா நடித்தால் அந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று திரை யுலகினர் இவரை சுற்றி வரும் நிலை இப்போதுள்ளது.
இப்போது கருத்து கணிப்பிலும் தென் இந்திய நடிகைகளில் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.
2013 இல் நடத்திய கருத்துக்கணிப்பில் தென் இந்திய நடிகைகளில் 7 ஆவது இடத்தில் இருந்த நயன்தாரா இப்போது முதல் இடத்துக்கு வந்திருக்கிறார்.
அவரது அழகு, நடிப்பு, திறமை அனைத்தையும் விரும்புவதாக கருத்துக்கணிப்பில் பங்கேற்ற ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
2 ஆவது இடம் ஸ்ருதிஹாசனுக்கு கிடைத்திருக்கிறது. 3 ஆவது இடத்தை எமிஜாக்சனும், 4 ஆவது 5 ஆவது இடங்களை அனுஷ்கா, தமன்னா ஆகியோரும் பிடித்திருக்கிறார்கள்.
அடுத்தடுத்த இடங்களில் த்ரிஷா, ஹன்சிகா உள்ளிட்ட மற்ற நாயகிகள் உள்ளனர்