இலங்கையில் தனி ஈழத்தை உருவாக்குவதற்கான முன்னெடுப்புக்களை எமது கட்சி தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று முன்தினம்(23) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;
தனி ஈழம் எய்திடும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். இலங்கை தமிழர்கள் மீது போர் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை நிகழ்த்தியவர்கள் மீது, சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
இலங்கை தமிழர்கள் முழு சுதந்திரம் மற்றும் சுயமரியாதையுடன் வாழ்ந்திடவும், தனி ஈழத்தை எய்திடும் வகையிலும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழ் நாட்டில் முகாம்கள் மற்றும் முகாம்களுக்கு வெளியே உள்ள இலங்கை தமிழர்கள் பல ஆண்டுகளாக இங்கே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், உதவிகளையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அளித்து வருகிறது.
அத்துடன் எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன் ஈழம் எய்திட தொடர்ந்து போராடும் என அவர் மேலும் தெரிவித்தார்
Election fever symtem