ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 22ம் திகதி நடந்த புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு கெப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறித்த இந்த ஆட்டத்தின் போது பெங்களூரு அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை.
இதையடுத்து கெப்டன் என்ற முறையில் பெங்களூரு கெப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் தாமதமான பந்து வீச்சு புகாரில் சிக்கிய முதல் கெப்டன் கோலி தான்.