தனது மருமகள் அவரது மூன்று மாத கைக்குழந்தையை தனது வீட்டின் அரு கில் கைவிட்டுச் சென்றதாக வயோதிப பெண்ணொருவர் அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குழந்தை பாலுக்காக அழுதுகொண்டிருந்தபோது செய்வதறியாது இவ்வாறு குழந்தையுடன் முறைப்பாடு மேற்கொள்ள பொலிஸ் நிலையத்துக்கு வந்ததாக அப் பெண் தெரிவித்திருந்தார்.
குழந்தை தொடர்ச்சியாக அழுது கொண்டிருந்தமையால் உடனடியாக செயற்பட்ட அகுரஸ்ஸ பொலிஸார் வேறொரு முறைப்பாட்டுக்காக வருகை தந்திருந்த தாயொருவரின் மூலம் குழந்தைக்கு பாலூட்டச் செய்துள்ளனர்.
பின்னர் அகுரஸ்ஸ பொலிஸ் அதிகாரிகள் வயோதிப பெண்ணின் முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை மேற்கொண்டிருந்த போது உறவினர் ஒருவரின் வீட்டிலிருந்த நிலையில் குழந்தையின் தாயைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்போது குறித்த தாயிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது குழந்தையின் தந்தை வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனியாக சென்றதால் தான் ஆதரவற்றிருந்ததாகவும் இதனாலேயே குழந்தையை கைவிட்டு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.