மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டினோ பெஸ்ட் 500ற்கும் மேற்பட்ட பெண் யுவதிகலுடன் உறவு வைத்திருந்ததுள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
பெஸ்ட் இனால் அண்மையில் வெளியாக்கப்பட்ட அவரது சுயசரிதையிலேயே மேற்குறித்த உறவுகள் குறித்து வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர்களில் பிரபலம் பெற்றிருப்பது தான் எனவும், உலகிலேயே மிகவும் உடற்கட்டமைப்புள்ள வீரர் தான் எனவும் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் டினோ மேலும் தெரிவித்துள்ளார்.
“நான் யுவதிகளை காதலிக்கின்றேன் , யுவதிகளும் என்னை காதலிக்கின்றனர். உலகிலேயே உள்ள வழுக்கை தலைகளில் நான் தான் மிகவும் அழகானவன். என்னை கேலியாக நானே கறுப்பு “பிரட் பிட்” என அழைத்துக்கொள்கிறேன். நான் வீரராக சுற்றுப்பயணத்தினை மேற்கொள்ளும் போது நிறைய பெண் யுவதிகளை சந்தித்துள்ளேன். அவர்களுடன் உலாவியிருக்கின்றேன்.. படுக்கையினை பகிர்ந்து கொண்டுள்ளேன். எனது கணிப்பின்படி நான் சுமார் 500ற்கும் 650 இற்கும் இடையில் பெண் யுவதிகளுடன் படுக்கையறையில் உல்லாசமாய் இருந்திருப்பேன். எது எவ்வாறு இருந்தாலும் யாராலும் அவர்களது முதல் காதலினை ஒருபோதும் மறக்க முடியாது.” இது டினோ’வுக்கும் உரித்தானது என தெரிவித்துள்ளார்.
“எனது முதல் காதலி மெலெஸ்ஸா. எங்கள் இருவருக்கும் தமானி என்ற ஒரு ஆண் குழந்தையும் இருந்தது.ஆனால் எல்லாம் இருண்ட யுகமாக மாறியது. அவள் என்னை விட்டுப் பிரிந்து சென்றால்.”
குறித்த சுயசரிதையில் டினோ தன்னை விபச்சாரனாகவும் அறிமுகப்படுத்தியுள்ளான். டினோ விரும்புவது எப்படிப்பட்ட பெண்களை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
“நான் ஒரு பெண்ணுக்கு ஆசைப்பட்டால், அவள் யாராக இருந்தாலும் பரவாயில்லை. அவள் தனியாக இருந்தால் முதலில் நான் சென்று என்னை அறிமுகப்படுத்துவேன். அதன் பின்னர் அவள் பற்றி அறிந்து கொள்வேன். எந்தப்பெண்ணும் என்னை மிரட்டிப் பயங்காட்டினது இல்லை.”
“நான் ஆண் விபச்சாரன் ஆனது உண்மை.. அதற்காக கண்ணைக்கட்டி களத்தில் இறங்க எனது மனதால் நான் நிர்பந்திக்கப்பட்டேன்.. எவ்வாறாயினும் நாளுக்கு நாள் எனது வாழ்க்கை புதிதாக ஆரம்பமானது. சிலசமயம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெண்ணுடன் உல்லாசமாய் இருந்தேன்.”
எனக்கு யாருடனும் தொடர்பு வைத்துக்கொள்ள தேவை ஏற்படவில்லை. இதனை நான் பெண் யுவதிகளுடனும் கூறியுள்ளேன். தொடர்புகள் இல்லை என்பது இல்லை. எனக்கு தேவைப்பட்டது இன்பம் மட்டுமே. குறித்த பெண் யுவதிகளிடம் பொய் கூறவில்லை. நேர்மையாய் இருந்தேன்.’’
மேலும் டினோ, தனது அணியின் சக விளையாட்டு நண்பர்கள் குறித்து கூறுகையில்;
“நான் எனது தொடர்புகளையும் உல்லாசமான பொழுதுகளையும் அணியின் சக விளையாட்டு வீரர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது அவர்களை நான் கேலி செய்வேன். கிரிக்கெட் விளையாட முடியுமென்பதாலேயே உங்களை பெண்கள் விருப்பபடுகின்றனர். கிரிக்கெட் விளையாட முடியாவிடின் துளிக்கும் மதிக்கமாட்டார்கள்.” என கூறி அவர்களை கேலி செய்கிறாராம்.
டினோ மேலும் கூறுகையில்;
“நாம் அணியுடன் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் போது பெண்களை மடக்கும் போட்டியில், எண்ணிக்கையில் நானே முதலில் இருப்பேன். 2005ம் ஆண்டு அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது 40 பெண்களை மடக்கினேன். அவுஸ்திரேலிய யுவதிகளே எனக்கு கிடைத்த மிகவும் சிறப்பான பெண்கள்.”
“எனது முதல் காதலி மெலிஸா இப்போது அவளுக்கென்று வாழ்க்கையினை அமைத்துக் கொண்டுள்ளாள். அவளுக்கு இன்னுமொரு குழந்தையும் உண்டு. அவள் விஷேடமானவள். அவளது எல்லா பிராத்தனைகளும் நிறைவேற நான் பிராத்திக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
இறுதியில் டினோ கூறுகையில்; எனது வாழ்வில் பெண்கள் எவ்வாறு நடந்து கொண்டிருந்தாலும் நான் எப்போதும் பெண்களை மதிக்கின்றேன். என கூறியுள்ளார்.
“பெண்கள் என்பது விசேடமானவர்கள். நான் உலகை முதலில் பார்த்ததும் உன்னதமான ஒரு பெண்ணினாலேயே ஆகும். அதனால் நான் அவர்களுக்கு மிகவும் மரியாதை அளிக்கின்றேன்.” எனவும் தெரிவித்துள்ளார்.

