பெருந்தொகை ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜை, மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக, சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
8 கிலோ 700 கிராம் ஹெரோயினுடன் 58 வயதான பாகிஸ்தான் பிரஜை ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று(25) கைது செய்யப்பட்டார்.
இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி சுமார் 87 மில்லியன் ரூபாய் எனத் தெரியவந்துள்ளது.