தான் இறந்­து­விட்­டதை போல் நடித்து முன்னாள் காத­லியின் கொலை முயற்­சியை அம்­ப­லப்­ப­டுத்­திய இளைஞர்

தனது முன்னாள் காத­லி­யினால் ஆள் வைத்து கொல்­லப்­ப­ட­வி­ருந்த இளைஞர் ஒருவர், தான் இறந்­ததைப் போல் நடித்­ததன் மூலம் முன்னாள் காத­லியின் நட­வ­டிக்­கையை அம்­ப­ல­மாக்­கி­யுள்ளார்.

பிராட் சதர்லேண்ட் (31) எனும் இந்த இளைஞர் அமெ­ரிக்க கடற்­ப­டையின் மரைன் பிரிவைச் சேர்ந்த வீர­ராவார். இவரும் மரைன் பிரவைச் சேர்ந்த லோரா பங்­கிங்ஹாம் எனும் வீராங்­க­னையும் காத­லித்து பின்னர் பிரிந்­தனர்.

அதன்பின் சதர்லேண்ட்டை கொல்­வ­தற்கு லோரா திட்­ட­மிட்டார். இதற்­காக நபர் ஒரு­வரை நிய­மித்த லோரா, அந் ­ந­ப­ருக்கு முற்­ப­ண­மாக 3000 டொலர்­களைக் கொடுத்துள்ளார்.

ஆனால், லோ­ராவின் துர­திஷ்­ட­மா­கவும் சதர்­லேண்ட்டின் அதிஷ்­ட­மா­கவும் அமைந்­தது என்­ன­வென்றால், லோரா நிய­மித்த நபர் அமெ­ரிக்­காவின் டென்னிஸ் மாநி­லத்தின் அரச புல­னாய்வுப் பணி­ய­கத்தைச் சேர்ந்த அதி­காரி ஒருவர்.

அந்த அதி­காரி, லோராவின் திட்­டத்தை சதர்­லேண்­டிடம் கூறினார். அதன் பின் பிராட் சதர்லேண்ட், கராஜ் ஒன்றில் வைத்து கொல்­லப்­பட்­டதைப் போல் பொலிஸார் நாட­க­மொன்றை நடத்­தினர்.

அதன்பின் பிடிக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­க­ளுடன் மேற்­படி அதி­காரி லோராவின் வீட்டுக்குச் சென்றார். அப்­பு­கைப்­ப­டங்­களைப் பார்த்து திருப்­தி­ய­டைந்த லோரா, ஒப்­பந்­தப்­படி மிகுதிப் பணத்­தையும் கொடுத்­த­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கடந்த பெப்­ர­வரி மாதம் இச்­ சம்­பவம் இடம்­பெற்றுள்ளது. பெப்­ர­வரி 24 ஆம் திகதி லோரா பங்­கிங்ஹாம் கைது செய்­யப்­பட்டார். இவர் அமெ­ரிக்க கடற்­படை வீராங்­க­னை­யாக ஈராக்கில் இரு தடவைகள் பணியாற்றியவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மே 2 ஆம் திகதி அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.