தோழியின் கடனட்டையைத் திருடி முழுக் குடும்பத்துக்கும் ஆடை வாங்க முயற்சித்த பெண்

கேகாலை கப­க­முவ கிரா­மிய வைத்­தி­ய­சாலை ஒன்றில் பணி­பு­ரிந்து வரும் பெண் ஊழியர் ஒரு­வரின் கட­னட்­டையை திருடி அதன் மூலம் சுமார் 34 ஆயிரம் ரூபா­வுக்கு தனது முழு குடும்­பத்­துக்­கு­மான ஆடை­களை கொள்­வ­னவு செய்த அதே வைத்­தி­ய­சா­லையின் சிற்­றூ­ழி­ய­ரான பெண் ஒரு­வரை கேகாலை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இந்தப் பெண்கள் இரு­வரும் கப­க­மு­லவ பிர­தே­சத்தை சேர்ந்­த­வர்கள் எனவும் வைத்­திய­ சாலையில் பணி­யினை ஆரம்­பித்­தது முதல் குறி த்த பெண் சந்­தேக நப­ரான பெண்­ணுடன் மிக வும் நெருக்­க­மாக நட்­புடன் பழகி வந்­த­தாக தெரிய­வந்­துள்­ளது.

கடந்த 11 ஆம் திகதி இப்பெண் கப­க­முவ வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து வேலை நிறை­வ­டைந்து கேகாலை பிர­தே­சத்­தி­லுள்ள ஆடை­யகம் ஒன்­றுக்கு சென்று தனது குடும்­பத்­துக்கு தேவை­யான ஆடை­களை தெரிவு செய்­துள்ளார்
பின்னர் தான் தெரிவு செய்த ஆடை­க­ளுக்கு கட­னட்டை மூலம் பணம் செலுத்­து­வ­தற்­காக முயற்­சித்த வேளையில் தன்­னி­ட­மி­ருந்த கட­னட்டை காணாமல் போயி­ருந்­தமை தெரி­ய­வந்­துள்­ளது.

இதன் பின்னர் கேகாலை பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்று முறைப்­பா­டொன்­றினை மேற்­கொண்­டி­ருந்­துடன் பொலிஸார் அவ­ரிடம் மேற்­கொண்ட விசா­ர­ணை­களில் தனது தோழி­யான சக ஊழியர் மீது சந்­தேகம் காணப்­ப­டு­வ­தாக தெரி­வித்தார்.

அத­ன­டிப்­ப­டையில் சந்­தேக நப­ரான பெண்ணை பொலிஸார் 13 திகதி கைது செய்து விசா­ர­ணை­களை மேற்­கொண்ட போது 11 ஆம் திகதி வைத்­தி­ய­சா­லையின் ஓய்­வ­றையில் தனது தோழியின் கைப்­பை­யி­லி­ருந்த கட­னட்­டையை திருடி கேகாலை நக­ரி­லுள்ள ஆடை­ய­க­மொன்றில் 34 ஆயி­ரத்து 514 ரூபா­வுக்கு ஆடைகள் கொள்வனவு செய்ததாக ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.