வஸீம் தாஜுடீனின் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸ் அதிகாரிகளால் விசேட அறிவிப்பு

பிரபல றகர் வீரர் வஸீம் தாஜுடீனின் கொலையினை மூடிமறைக்க வஸீம் தாஜுதீன்  வாகன விபத்தில் உயிரிழந்ததாகக் கூறி உண்மையினை மறைத்து விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வந்த அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் உண்மையினை தெரிவிக்க முன்வந்துள்ளதாக அரசுப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த விசாரனைகளை முடிவுக்கு கொண்டுவர அரச உயரதிகாரியொருவர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவருக்கு வழங்கிய உபதேசங்கள் மற்றும் மிரட்டல்களுக்கு அமையவே சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார் எனவும் தகவல்கள் கசிந்துள்ளதாக மேலும் குறித்த அரச பத்திரிகை தெரிவித்துள்ளது.

தாஜுதீன் கொலை நிகழ்ந்த மறுநாள் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபரின் காரியாலயத்தில் குறித்த கொலையின் விசாரணைகளை திசை திருப்ப விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தை ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.