மாலைதீவை அபிவிருத்தி செய்ய அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் – ஈரானிய துதுவர்

மாலைத்தீவை அபிவிருத்தி செய்யவும், ஈரான்-மாலைத்தீவு உறவுகளை மேம்படுத்தவும் அர்பணிப்புடன் செயற்படுவேன் என மாலைத் தீவுக்கான புதிய ஈரானிய தூதுவர் முஹம்மத் ஸாஏறி அமீராணி தெரிவித்துள்ளார்.

மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் துன்யா மஃமூனுடன் முன்தினம் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஈரான் தூதுவர் மேற்கண்டவாறு உறுதி அளித்தார்.

குறித்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் ஆராயப் பட்டதாக மாலைத்தீவு செய்திகள் மேலும்  தெரிவிக்கின்றன.