ஜனாதிபதியின் குரலைப் போன்று ஒருவர் – CID விசாரணை ஆரம்பம்

இலங்கையின் பிரபல தொலைக்காட்சி சேவையின் பிரதானி ஒருவரை, ஜனாதிபதியின் குரலைப் போன்று போலியான நபர் ஒருவர் திட்டியதாக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அரசாங்க புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் இடம்பெற்ற கூட்டத்தில், ஜனாதிபதி ஊடக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவது தொடர்பில் தொலைக்காட்சி சேவைகளின் பிரதானிகளை திட்டியுள்ளார்.

தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணையத்தின் பிரிவுக்கு உட்பட்டு ஒழுக்க ரீதியிலும் செயற்படுமாறு தொலைக்காட்சி சேவையின் பிரதானிகளுக்கு குறிப்பிட்டுள்ளார்.

அந்த சம்பவத்தின் பின்னர் ராஜபக்ச அரசாங்கத்தை நெருக்கமாக வைத்து கொண்டு தொலைக்காட்சி அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொண்டுள்ள தொலைக்காட்சி பிரதானிகள் கொழும்பில் அமைந்துள்ள ஒரு பிரபல ஹோட்டல் ஒன்றில் கூடி இந்த செயற்பாட்டை திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதிக்கு தேவையற்ற விளம்பரம் வழங்கி நாட்டினுள் நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டம் தொடர்பில் பிழையான விளக்கங்களை கொடுத்து மக்களுக்கு போலி தகவல்களை வழங்கும் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டம் தொடர்பில் இதற்கு முன்னர் தகவல் வெளியாகியிருந்தன.

கடந்த பல மாதங்களாக ஜனாதிபதி நேரடியாக குறித்த தொலைக்காட்சி சேவைகளின் செயற்பாடுகளை கண்காணித்ததன் பின்னரே அண்மையில் தொலைக்காட்சி பிரதானிகளை அழைத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல் ஒரு அச்சு ஊடகங்களிலே இந்த நிலையில் அதிகமாக காணப்படுவதாகவும், நல்லாட்சி ஊடாக சுதந்திரத்தை பயன்படுத்தி கொண்டு போலியான தகவல்களை மக்களுக்கு பரப்பும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.