முதலீட்டு சபை மூலம் வரிச்சலுகை வழங்கப்படுவது இன்று செவ்வாய்க்கிழமை முதல் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட சலுகைகளை பெற்றுத் தருவதாகவும் குறிப்பிட்டார்.
இன்றைய தினம் பிரதமர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.