தனது கையடக்க தொலைபேசியிலிருந்து கெசல்வத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்த இளைஞர் நீதிமன்றின் முன்னிலையில் தனது தவறை
ஒப்புக் கொண்டதையடுத்து குறித்த நிலைய பொறுப்பதிகாரியின் காலில் வீழ்ந்து மன்னிப்பு கோருமாறு கொழும்பு நீதவான் மன்றின் பிரதம நீதிவான் கிஹான் பிலபிட்டிய சந்தேக நபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த சந்தேக நபரான இளைஞர் கெசல்வத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜே.கே.எஸ்.ஜயனெத்தி முன்னிலையில் வந்து அவரின் காலில் விழுந்து மன்னிப்பு கோரியுள்ளார்.
மீண்டும் இதுபோன்றதொரு தவறை செய்யாதிருக்குமாறு நீதிமன்றத்தினால் சந்தேக நபர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கடுமையாக எச்சரிக்கப்பட்டவர் காலியை சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.