மாலிங்க’வினை மைதானத்திலிருந்து தூரமாக்கியது வைத்திய அறிக்கை

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்கவின் காலில் ஏற்பட்ட உபாதை குறித்து வைத்திய அறிக்கையானது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வைத்தியக்குழுவினால் நேற்றையதினம்(26) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; லசித் மாலிங்கவிற்கு திரும்ப எந்தவொரு சத்திர சிகிச்சையும் மேற்கொள்ளத் தேவையில்லை எனவும் குறைந்தது 6 மாதமளவு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, மாலிங்க ஓய்வு காலங்களில் மிகவும் கவனமாய் இருப்பதோடு, 3 மாதத்தில் திரும்ப எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனை மூலம் உபாதையின் நிலைமையினை அறிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாலிங்கவின் காலிலுள்ள சதைக்கு பயிற்சியினை வழங்குவதன் மூலம் (Muscle Rehabilitation Program) விரைவில் பூரண சுகத்தினை பெறலாம் எனவும் கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.