பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடக்கும் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், செக்குடியரசின் லுாசி சபரோவா மோதுகின்றனர்.
இதில் செரினா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸலாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இன்று நடக்கும் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்–1’ வீராங்கனை அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், 13வது இடத்தில் உள்ள செக்குடியரசின் லுாசி சபரரோவாவை எதிர்கொள்கிறார்.
டபிள்யு.டி.ஏ., அரங்கில் இவர்கள் இருவரும் மோதிய 8 போட்டியிலும் செரினா வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
அரையிறுதியில் செர்பியாவின் அனா இவானோவிச் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடரின் பைனலுக்கு முன்னேறிய உற்சாகத்தில் சபரோவா உள்ளார்.
இதேமுனைப்புடன் இன்றைய பைனலில் விளையாடும் பட்சத்தில், முதலாவது கிராண்ட் ஸலாம் பட்டம் வென்று அசத்தலாம் என நம்பப்படுகின்றது.