குப்பைத் தொட்டியில் காணப்பட்ட ஊழியர்களின் ஆவண கோவைகள்

வவு­னியா நக­ர­ச­பையில் நேற்று முன்­தினம் காலை நக­ர­சபை ஊழி­யர்­களின் ஆவ­ணங்கள் சில­வற்றை நக­ர­ச­பை­யி­லுள்ள குப்பைத் தொட்­டி­யி­லி­ருந்து மீட்­டுள்­ள­தாக நக­ர­சபை ஊழி­யர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

வவு­னியா நக­ர­ச­பையில் ஏற்­க­னவே ஏழு பேரின் ஆவ­ணங்கள் ஊழி­யர்­களின் கோவைகள் காணாமற் போயுள்­ள­தாக நக­ர­சபை ஊழி­யர்கள் தெரி­வித்துள்­ளனர்.

இது தொடர்­பான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டுவரும் நிலையில் நேற்று முன்­தினம் காலை வேலைக்குச் சென்ற ஊழி­யர்கள் அங்கு பணி­புரியும் ஊழி­யர்­களின் ஆவ­ணங்கள் சில­வற்றை அங்­கி­ருக்கும் குப்பைத் தொட்­டி­யி­லி­ருந்து மீட்­டுள்­ள­துடன் இது தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.