ஓய்வு பெறுகிறார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டவர் கிரேக் கீஸ்வெட்டர்.

இவர் கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் நார்த் ஆம்ப்டன்ஷைர் அணிக்கு எதிராக விளையாடும்போது அவரது கண்ணில் காயம் ஏற்பட்டது. அத்துடன் கன்னத்தில் உள்ள தாடை எழும்பிலும் முறிவு ஏற்பட்டது. இதில் இருந்து குணம் அடைந்து மீண்டும் விளையாட வாய்ப்பிள்ளாததால் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

27-வயதாகும் கீஸ்வெட்டர் தென்ஆப்பிரிக்காவில் பிறந்தவர். இங்கிலாந்து அணிக்காக 46 ஒருநாள் போட்டிகளிலும், 25 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2010-ம் ஆண்டு வங்காள தேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான இவர், ஒருநாள் போட்டியில் 497 ரன்கள் எடுத்துள்ளார்.

இங்கிலாந்து அணி கைப்பற்றிய இருபது ஓவர் உலகக்கோப்பை இங்கிலாந்து அணியில் கீஸ்வெட்டர் இடம்பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.