பொது இடங்களில் பிச்சை எடுப்பதைவிட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது எவ்வளவோ மேல் என இந்திய உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மஹராஷ்டிரா மாநிலத்தில், மதுபான விடுதிகளில் அழகிகள் நடன நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இதற்கு தடை விதிக்கும் பொருட்டு, அம்மாநில அரசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதை, சட்டமன்றத்தில் மசோதாவாக நிறைவேற்றியது.
இதன்படி நட்சத்திர ஹோட்டல்கள், நாடக அரங்குகள், கலையரங்கம், விளையாட்டு கிளப்புகள் போன்றவற்றிலும் அழகிகள் நடனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இந்திய ஹோட்டல்கள் மற்றும் ‘ரெஸ்டாரண்ட்’ சங்கம் உள்ளிட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்