ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட மற்றும் தேர்தல் தொகுதி அமைப்பாளர்களாக 11 பேரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
நியமனங்களை வழங்கும் நிகழ்வு இன்று(28) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது
குறித்த 11 அமைப்பாளர்களும்,
வடமேல் மாகாண சபை உறுப்பினர், கமல் இந்திக – ஹிரியால தொகுதிக்கும் முன்னாள் பெந்தர பிரதேச சபை தலைவர், கிரிஷான் திரிமன்ன மற்றும் முன்னாள் எல்பிட்டி பிரதேச சபைத் தலைவர் அமில ஹர்ஷன காரியவசம் ஆகியோர் பெந்தர – எல்பிட்டி தொகுதி அமைப்பாளர்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் பேரரான பிரதீப் ஜயவர்தன கம்பஹா மாவட்டத்திற்கும், முன்னாள் மேல் மாகாண உறுப்பினர்களான காமினி டி சில்வா மற்றும் புத்திக்க இத்தமல்கொட ஆகியோர் கொழும்பு மாவட்டத்திற்கும், மனுல சமல் பெரேரா களுத்துறை மாவட்டத்திற்கும், பியல் தர்ஷன குருகே காலி மாவட்டத்திற்கும் மற்றும் நலீன் புஷ்ப குமார கேகாலை மாவட்டத்திற்கும் துஷார திலகரத்ன குருநாகல் மாவட்டத்திற்கும் தெரிவாக்கப்பட்டுள்ளனர்.