தம்மாலோக்க தேரரின் விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிப்பு

அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் யானைக் குட்டியொன்றை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள உடுவே தம்மாலோக்க தேரர் நீதிமன்ற விசாரணைக்கு முகங்கொடுத்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்றையதினம்(28) நடைபெற்ற போது, விசாரணை நிலை தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றில் தகவல் தெரிவித்தனர்.

கிருலப்பனையில் அலன் மதினியாரமாய விகாரையில் உள்ள உடுவே தம்மாலோக்க தேரர் தொடர்பான விசாரணை சான்றுகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருப்பதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதவான் நிசாந்த பீரிஸிடம் தெரிவித்துள்ளனர்.

உடுவே தம்மாலோக்க தேரர் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜுலை மாதம் 9ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.