கொழும்பு – கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி உடனடியாக மூடக்கோரி பாரிய ஆர்ப்பாட்டம்
கொழும்பு அரச பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் இன்று(28) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்கள்.
குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு மருத்துவ பீடத்தில் இருந்து ஆரம்பித்து ஜனாதிபதி செயலகம் வரையில் செல்லவுள்ளனர்.
இதில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், மாலபே தனியார் மருத்துவ கல்லூரி உடனடியாக மூடப்பட வேண்டும், மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தார்கள்.
மேலும் அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அளித்து விட்டு அதை நிறைவேற்றாமல் மாணவர்களை ஏமாற்றுவதாகவும் குற்றம் சுமத்துகின்றார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஆயிரம் மாணவர்களுக்கும் மேல் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


