சீனாவில் செங்குத்தான மலையொன்றின் உச்சியை அடைவதற்காக 1070 அடி (326 மீற்றர்) உயரமான லிப்ட் (உயர்த்தி) தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
உலகில் திறந்த வெளியில் நிர்மாணிக்கப்பட்ட மிக உயரமான லிப்ட் இதுவாகும். ஹுனான் மாகாணத்தின் ஸாங்ஜியாஜியே வனப் பூங்கா எனும் சுற்றுலாத் தலத்தில் இந்த லிப்ட் நிர்மாணிக்கப்பட்டுள்ளது
கண்ணாடி சுவர்களைக் கொண்டதாக இந்த லிப்ட் உள்ளதால் இயற்கையை ரசித்தவாறு இதில் பய ணம் செய்யலாம்.
இந்த லிப்ட் மூலம் 1070 அடி உயரத்தை யும் சுமார் 2 நிமிடங்களில் கடந்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே தடவையில் 50 பேர் இந்த லிப்ட் டில் பயணம் செய்ய முடியும்.