முச்சக்கர வண்டி பஸ்சுடன் மோதிய விபத்தில் நால்வர் பலி

எஹெலியகொட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

அதிகாலை 2.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

இரத்தினபுரி – கொழும்பு வீதியூடாக வேகமாகப் பயணித்த முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிளுடன் மோதியவுடன் கட்டுப்பாட்டையிழந்து வீதியில் குடைசாய்ந்ததாகவும்,
இந்த சந்தர்ப்பத்தில் கொழும்பிலிருந்து இரத்தினபுரி நோக்கிச் சென்ற பஸ் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கர வண்டியிலிருந்த நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும்  தெரிவித்தார்.

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.