தனியார்துறை ஊழியர்களின் சம்பளம் 2500 அதிகரிக்கவில்லையெனில் சட்டநடவடிக்கை

தனியார் துறை ஊழியர்களின் ஊதியம் 2500 ரூபாவில் அதிகரித்து நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தை தொடர்ந்து குறித்த ஊதிய அதிகரிப்பை செயற்படுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.

குறித்த ஊதிய அதிகரிப்பு வருடாந்த ஊதிய அதிகரிப்பிற்கு மேலதிகமாக தனியார் ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டும் என குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்த அமைச்சின் மூத்த சட்ட ஆலோசகர் ஆர் பி . விமலசேன தெரிவித்திருந்தார்.