கும்பமேளா சமத்துவம் கோரி பெண் துறவியின் ஜீவசமாதிப் போராட்டம்

வட இந்தியாவின் உஜ்ஜைன் நகரில் நடைபெறும் கும்பமேளாவில், தனக்கும் தன்னோடு வந்த பெண் சாதுக்களுக்கும் கங்கையில் புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பெண் சாமியார் ஒருவர் தன்னை உயிரோடு புதைத்துக்கொள்ளும் வித்தியாசமான போராட்டம் ஒன்றை நேற்று முன்தினம் நடத்தினார்.

திரிகால் பசந்தா என்னும் அந்த பெண் சாமியார், பாரி அகாரா என்கிற ஒரு மடத்தை நிறுவி நடத்தி வருகிறார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உஜ்ஜைன் நகரில் கும்மேளாவை ஒட்டி புனித கங்கை நதியில் திரிகால் பசந்தாவும் அவரது சிஷ்யையான பெண் சாதுக்களும் நீராட முயன்றார்கள்.

ஆனால் மற்ற மடாதிபதிகள் இவரையும் இவரது அனைத்துப்பெண் சாதுக்களைக் கொண்ட மடத்தையும் அங்கீகரிக்க மறுத்து வருகின்றனர்.

எனவே அவரையும் அவரது மடத்தைச் சேர்ந்த ஏனைய பெண் சாதுக் களையும் அவர்கள் விரும்பியபடி கங்கையில் புனித நீராட அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை.

இதை எதிர்த்து திரிகால் பசந்தா தன்னை உயிரோடு புதைத்துக்கொள்ளும் வித்தியாசமான போராட்டத்தை நடத்தினார்.

கங்கை நதியையொட்டி தனது சிஷ்யைகளான பெண் சாதுக்களால் வெட்டப்பட்ட ஆழமான புதைகுழியில் தியானம் செய்யும் கோலத்தில் அமர்ந்தார்.

அவர் மீது அவரது சீடர்கள் மலர்கள் தூவி மண்ணை கொட்டி மூட முயன்றனர். அவரைச்சுற்றி இடுப்பளவு மண் கொட்டப்பட்ட நிலையில் காவல்துறையினரும் உள்ளூர் அதிகாரிகளும் தலையிட்டு அவரை அங்கிருந்து அகற்றியுள்ளார்.

2000 ஆம் ஆண்டு இவர் உருவாக்கிய அனைத்துப் பெண் சாமியார்களைக் கொண்ட பெண்களுக்கான மடம் இந்தியாவின் முதலாவது அனைத்துப் பெண் சாமியார்களுக்கான மடமாக கருதப்படுகிறது.

இந்தியாவில் பரவலான அங்கீகாரம் பெற்றிருக்கும் 13 பிரதான இந்து மடங்களுமே ஆண்கள் தலைமையிலான மடங்களே.

16299s2