சுமதிபால தொடர்பில் உண்மைகளை அம்பலப்படுத்துவேன் – அர்ஜுன

சுமதிபால தொடர்பில் உண்மைகளை அம்பலப்படுத்துவேன் – அர்ஜுன

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தொடர்பில் மற்றுமொரு உண்மையை வெளியிடப் போவதாக துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

திலங்க சுமதிபால டுபாயில் இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் தலைமை நிர்வாக கூட்டத்திற்கு சென்றேன் என்று கூறிய விடயம் தொடர்பிலேயே அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

திலங்கவின் இந்த விடயத்தில் எவ்வித உண்மையும் இல்லை என்று அர்ஜுன குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால சென்றுள்ளார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இருந்த போதிலும் அது தவறான செய்தி என்று அர்ஜுண தெரிவித்துள்ளார்.