மணமகள் கேட்ட திருமணப்பரிசு??ஆச்சர்யத்தில் உறைந்த மணமகன்!!

மத்தியபிரதேச மாநிலத்தில் நடைபெறும் திருமணங்களில், மணப்பெண்ணுக்கு அவளுக்கு பிடித்தமான நகைகளையோ அல்லது வீட்டு உபயோக பொருட்களையோ மாப்பிள்ளை வீட்டார் மணப்பெண்ணுக்கு பரிசளித்து​,​ தங்கள் வீட்டுக்கு அழைத்து செல்வது பாரம்பர்ய வழக்கம்.

சமீபத்தில் அங்குள்ள கிசிபுரா என்ற கிராமத்தில் நடந்த திருமணம் ஒன்றில், மணப்பெண் பிரியங்கா படோரியா தனக்கு விருப்பமான பரிசாக மாப்பிளை வீட்டாரிடம் கேட்டது ​என்ன தெரியுமா?

அவர் கேட்டவை ​அனைவரையும் வியக்க வைத்துள்ளது. ஆம். 10,000 மரக்கன்றுகளை திருமண பரிசாக ​தன் கணவர் வீட்டாரிடம் கேட்டிருக்கிறார் 22 வயது பிரியங்கா.

​பத்து தங்க நகைகளுக்கு பதிலாக மரங்கள் நடப்பட வேண்டும் என்று கூறியதும் ஏதோ ​​,​ இருபது மரங்கள்தான் கேட்பார் என்று நினைத்திரு​ந்தனர்.

ஆனால் அவர் கேட்டது பத்தாயிரம் மரக்கன்றுகள். மாப்பிள்ளை ரவி சவுஹான் மரங்கள் மீது தன் வருங்கால மனைவிக்கு இருக்கும் ​விருப்பத்தை ​​அறிந்து இதற்கு சம்மதித்து இருக்கிறார். “மரங்கள் வெட்டப்பட்டு பாலைவனமான பூமியில் விவசாயியான என் தந்தைபட்ட வேதனைகள் தன் மனதில்​, ஆழமாக பதிந்துள்ளதால்​ மரங்களின் ​முக்கியத்துவம் எனக்கு நன்கு புரியும்.

பிறப்பு முதல் இறப்பு வரை மரங்கள் மனிதனுக்கு உதவுகின்றன. ஆதலால் மரங்களை வளர்த்தாக ​ வேண்டும் என்பது எனது விருப்பம்” என​ கூறும் பிரியங்கா, பத்தாயிரம்மர​க்கன்றுகளில் பாதியை தன் தந்தை வீட் டுப் பகுதியிலும், மறுபாதியை தன் கணவன்வீட்டு பகுதியி​லும் நடுவதற்கு கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறு வயதில் இருந்தே மரங்களி​ன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட பிரியங்கா, இந்த பத்தாயிரம் மரக்கன்றுகளை வளர்​த்து, விவசாயிக ளுக்கும் இயற்கைக்கும் உதவப்போவதை நினைத்தால் தனக்கு பெருமையாக உள்ளது என்கிறார்.

மேலும், ‘உலக பூமி தினத்தன்று என் திருமணம் நிச்சயித்த நாளி​லிருந்தே எனக்கு இந்த ஆசை இருந்தது. பத்து வயதில் இருந்தே மரங்களை நான்​ நட்டு பராமரித்து​ வருகின்றேன். இனி என் கணவரோடு சேர்ந்து ​என் வாழ்நாள் முழுவதும் ​மரங்கள் நடுவேன்’ என்கிறார்

ஏப்ரல் 22 ம் தேதி திருமணம் முடிந்த கையோடு தங்கள் ஊரில் மாங்கன்றுகளை நட்டிருக்கும் இந்த ஜோடி, இனி வரும் ஒவ்வொரு திருமண நாளுக்கும் பல மரக்கன்றுகளை நடப்போவதாக கூறுகின்றனர்.