புகையிரதம் தடம் புரண்டதால் வட புகையிரத மார்க்கத்தில் புகையிரதங்கள் தாமதம்

வடக்கு புகையிரத மார்க்கத்தில் பரசன்கஹவெவ-சாலியபுர ஆகிய இடங்களுக்கிடையில் ரயில் ஒன்று இன்று காலை தடம்புரண்டுள்ளது.

இதன் காரணமாக வட பகுதிக்கான புகையிரதங்கள் தாமதம் அடைந்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.

காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதமே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ரயில் தண்டவாளங்களும் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.