கிழக்கு பல்கலைக்கழக, சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளதாக குற்றங்களை கண்டறியும் பொலிஸ் பிரிவின் (சொகோ) மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி ஐ.பி.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
களுதாவளை – மாவடி வீதியைச் சோந்த 25 வயதுடைய குணரத்தினம் வதனா என்ற மாணவியே இவ்வாறு தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.