மே தின கொண்டாட்டங்களுக்கு பஸ்களை வழங்கியதன் மூலம் இலங்கை போக்குவரத்துச் சபை 45 மில்லியன் ரூபாவை சம்பாதித்துள்ளதாக அதன் பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக்க தெரிவித்துள்ளார்.
மே தினக் கூட்டங்களுக்காக 4 ஆயிரம் பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் குழுக்கள் மே தினக் கூட்டங்களுக்காக நேற்றைய தினம் பணத்தை செலுத்தி 3 ஆயிரத்து 500 பஸ்களை பெற்றுக்கொண்டுள்ளன.
இதனால், இன்றைய தினம் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளுக்கு போதிய பஸ்கள் இல்லாமல் போயுள்ளதுடன், நாளைய தினம் நிலைமை வழமைக்கு திரும்பும் எனவும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதி முகாமையாளர் கூறியுள்ளார்.