(எம்.ஜே.எம். சஜீத்)
இலங்கை சிறைச்சாலை ஐக்கியத்தின் விழிபுணர்வு கூட்டம்
குற்றவாளிகளாகாமல் வாழும் வழிமுறைகளை ஆராயும் விழிப்புணர்வு கருத்தரங்கு கோலாவில் வினாயகபுர மகா வித்தியாலயத்தில் அக்கறைப்பற்று பொலிஸ் நிலைய மோட்டார் வாகண போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ.கே. கமஹே தலைமையில் நடைபெற்றது.
மட்டகளப்பு மற்றும் அம்பாறை போன்ற பிராந்தியகளில் நடைபெறுகின்ற கொலை, கொல்லை, கற்பழிப்பு, சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற குற்றங்களை தடுக்கும் முகமாக இவ் விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றதுடன் எமது பிரதேசத்தில் நடை பெறுகின்ற விபத்துகள் சம்மந்தமாகவும், மோட்டார் வாகண சட்ட விதி முறைகள் சம்மந்தமாகவும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு அக்கறைப்பற்று பொலிஸ் உத்தியோகர்களால் விளங்கப்படுத்தப்பட்ட்து.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீஸ்வரன், விசேட அதிதியாக இலங்கை சிறைச்சாலை ஐக்கியத்தின் தேசிய இயக்குனர் எஸ். ஜெயராஜ், இலங்கை சிறைச்சாலை ஐக்கியத்தின் மட்டு அம்பாறை மாவட்ட தலைவர் போதகர் டி.எஸ். தயாசீலன், வெளிக்கடை சிறைக்சாலையின் கைதிகள் நலன்புரி சங்கத்தின் சிரேஷ்ட அத்தியட்சகர் ராச ஐயா ராஜஸ்வரன், மற்றும் பொலிஸ உத்தியோகத்தர்களான ஏ.மர்ஜான் (54573), ஏ.எம்.நஹிம்(44129), ஏ.எம்.எம்.பரிஸ்(44394), கிராம உத்தியோகத்தர்களும் மாணவ மாணவிகளும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.