கிருலப்பனையில் இடம்பெற்ற மே தின கூட்டத்திற்காக மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவணியினர் வந்த பஸ்வண்டி சில்லில் அகப்பட்டு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இதனையடுத்து குறித்த பஸ்ஸின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பலியான மாணவன் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்பவர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.